Posts

Showing posts from September, 2020

28.09.2020 : புரட்டாசி 12 : திங்கட்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : சிவ பெருமான்.

Image
  இன்று : திங்கட் கிழமை. வழிபட வேண்டிய கடவுள் : சிவ பெருமான். சொல்ல வேண்டிய மந்திரம் :                "ஓம் நமச்சிவாய."                "OM NAMA SHIVAYA."               சொல்ல வேண்டிய காயத்ரி :              "ஓம் தத்புருஷாய வித்மஹே                      மஹாதேவாய தீமஹி                 தந்நோ ருத்ர ப்ரசோதயாத்." "OM DATHPURUSAYA VIDMAHE   MAHADHEVAYA DHEEMAHI   TANNO RUDRA PRACHODAYAT." வாழ்க வளமுடன்.

ஸ்ரீ ராம பிரான் ஜாதகம் : பார்த்தாலே புண்ணியம், வணங்கினாலோ புண்ணியத்திலும் புண்ணியம் : பெரியக்கா

Image
 ஸ்ரீ ராம பிரான் ஜாதகம் : பார்த்தாலே புண்ணியம், வணங்கினாலோ புண்ணியத்திலும் புண்ணியம் : பெரியக்கா                       ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் ஜென்ம ஜாதகத்தை பார்ப்பதற்கே, புண்ணியம் கோடி வேண்டும். அந்த இறைவனின் ஜாதகத்தை வைத்து வழிபட்டால், கோடானு கோடி புண்ணியம் கிட்டும். "Temples of Tamilagam" வாசகர்களுக்கு எப்பொழுதுமே புண்ணியம் கோடி உண்டு. இந்த ஜாதகத்தை நீங்கள் பார்க்கும் பேறு பெற்றவர்கள். 

27. 09. 2020 : புரட்டாசி 11 : ஞாயிற்றுக்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : ஸ்ரீ சூர்ய நாராயண மூர்த்தி.

Image
  இன்று  :  ஞாயிற்றுக்கிழமை. வழிபட வேண்டிய கடவுள்  : ஸ்ரீ சூர்ய நாராயண மூர்த்தி . சொல்ல வேண்டிய  காயத்ரி  : சூர்ய நாராயண காயத்ரி " ஓம் பாஸ்கராய வித்மஹே மகத்யுதிகராய தீமஹி தந்நோ சூர்யப் ப்ரசோதயாத் ." "OM BASKARAAYA VIDMAHE MAKATYUDHIKARAAYA DHEEMAHI TANNO SURYAP PRACHODAYAT." சூரியனை நாராயணனாக கருதி வழிபாடும் மந்திரம் இது.  இந்த மந்திரம் சொல்வதினால்;  வியாதிகள் குணமாகும், செல்வம் பெருகும், எதிரிகள் பயம் நீங்கும், மரண பயம் விலகும்.  தினமும் காலையில் எழுந்து;  கிழக்கு  திசையில் சூர்ய உதயத்தை பார்த்து, சூரியனை வணங்கி இந்த மந்திரத்தை சொல்லலாம். சூர்ய காயத்ரியும் சொல்லலாம். சூர்ய காயத்ரி  : "ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே பாச ஹஸ்தாய தீமஹி தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்." "OM ASWATHVAJAAYA VIDMAHE PAASA HASTHAAYA DHEEMAHI TANNO SURYAP PRACHODAYAT." வாழ்க வளமுடன்.

யம பயம் நீக்கும் சக்தீஸ்வர சுவாமி, தலைகீழாய் சிவன் காட்சி தரும் அதிசய கோவில் : சித்தர்க்கடியான்.

Image
புரட்டாசி முதல் வாரம்  தெரிந்து கொள்ளும் கோயில் :  ஸ்ரீ பார்வதி சமேத சக்தீஸ்வரர் திருக்கோவில் யம பயம் நீக்கும் சக்தீஸ்வர சுவாமி, தலைகீழாய் சிவன் காட்சி தரும் அதிசய கோவில் : சித்தர்க்கடியான்.                     சிவன் தலைகீழாய் காட்சி தரும் அதிசய கோவில், சிவன் அருகில் முருகனை மடியில் தாங்கி காட்சி தரும் அம்மன், சிவன் சிரசாசனம் கொண்ட கதை.  உலகை காத்து இரட்சிக்கும் பரம்பொருளாகிய ஆதி அந்தம் இல்லாத சிவ பெருமான் பல்வேறு திருவிளையாடல்களும், பல்வேறு கோலங்களும் பூண்டு காட்சி தருகிறார்.                     பக்தர்களுக்கு வேண்டிய அருள்புரிய இறைவன் பல கோலங்கள் பூண்டு அதிசயிக்கும் வண்ணம் உருவங்களை மாற்றி அருள்புரிந்துள்ளார்.  அந்த வகையில் உலகில் வேறு எங்கும் காண இயலாத வகையில் தலைகீழாய் அமர்ந்து சிரசாசனத்தில் காட்சி தரும் அதிசய திருக்கோவில் தான் ஆந்திர மாநிலம் பீமாவரம் அருகில் உள்ள யனமதுரு ஸ்ரீ பார்வதி அம்பிகா சமேத சக்தீஸ்வரர் ஆலயம் ஆகும். சிரசாசன கோல தலவரலாறு                     முன்னொரு காலத்தில் சம்பாசுரன் என்ற அரக்கன் கடும் தவம் புரிந்து பிரம்மனிடம் இருந்து பல வரங்களை பெற்றான்.  தன் வரத்தை கொண்டு

26.09.20 : புரட்டாசி 10 : சனிக்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : ஸ்ரீ ஆஞ்சநேயர் ஸ்வாமிகள்.

Image
  இன்று  :  சனிக்கிழமை .   வழிபட வேண்டிய கடவுள்  :   ஸ்ரீ ஆஞ்சநேயர் ஸ்வாமிகள் . சொல்ல வேண்டிய  மூல  மந்திரம்  :                             " ஓம் நமோ பகவதே ஆஞ்சநேயா  மஹாபலாயா  ஸ்வாஹா. " "OM NAMOA BHAGAVATE AANJANEYA MAHABALAYA SWAHA." சொல்ல வேண்டிய மந்திரம்  :   ஆஞ்சநேயர் ஸ்லோகம் " ஓம் ஆஞ்சநேயம் மஹாவீர்ய ம் சர்வ கார்ய ஜெயப்பிரதம்  கிரஹ சங்கட நிவர்த்தியர்த்தம்  ஸ்ரீ சிவ பக்தாய நமோ நமஹா ." "OM AANJANEYAM MAHAVEERYAM SARVA KARYA JAYAPRATHAM GRAKA SANGADA NIVARTTHIYARTTHAM SRI SIVA BAKTHAYA NAMO NAMAHAA."                                                                          வாழ்க வளமுடன்.

மருமகளின் மனசு : சித்தர்க்கடியான்.

                      மருமகளின் மனசு : சித்தர்க்கடியான்.                     "TEMPLES OF TAMILAGAM" வாசகர்களுக்காக "மருமகளின் மனசு "  என்னவென்று தெரிந்து கொள்ள  ஒரு கதை.                     தனது மாமியாரை பிடிக்காத ஒரு இளம் பெண் அழுது புரண்டு, தன் கஷ்டம் எல்லாம் தீர்த்திட வேண்டி. சிவனை நோக்கி விரதமிருந்தாள்.  தவமாய் தவம் கிடந்து, மெய் வருத்தி நாள்தோறும் பூஜை செய்தாள்.  அவளது தவத்தால்; மனம் இரங்கிய சிவபெருமான், ஒரு நாள் அவ ள்  முன் தோன்றி, "மகளே! உனது மனவலிமையை மெச்சி மகிழ்ந்தேன்!! ஏதாவது ஒரு வரம் கேட்டு பெற்றுக்கொள்." என்றார். " அப்பனே...எனக்கு ஒரு வரம் போதாது, மூன்று வரம் வேண்டும்."  என்று   அந்த  பெண் கெஞ்சினாள்.                    " பெண் புத்தி பின் புத்தி !"  என்று நினைத்து  உள்ளுக்குள் நகைத்தார் சிவபெருமான். " சரி குழந்தாய் !  ஒரு கண்டிஷனுடன்   உனக்கு மூன்று வரங்கள் அளிக்கப்படும்.  கண்டிஷனை ஏற்றுக் கொள்கிறாயா?" என்று கேட்டார்.  அவளோ அழகாய் சம்மதித்தாள்.  பகவான் கண்டிஷனை கூறினார், " இதோ பார் மகளே! நீ எது கேட்டாலும் கிட

25.09.20 : வெள்ளிக்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயார்.

Image
  வெள்ளிக்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயார்.                                                                                           இன்று  :   வெள்ளிக்கிழமை.   வழிபட வேண்டிய கடவுள்  :   ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயார் . சொல்ல வேண்டிய  மூல  மந்திரம்  :   " ஓம்  ஸ்ரீ  மாத்ரே   நம :" "OM SRI MATRE NAMAHA." சொல்ல வேண்டிய  காயத்ரி  மந்திரம்  :   ஸ்ரீ  மஹா லட்சுமி   காயத்ரி   "ஓம்  மஹாலக்ஷ்மை ச  வித்மஹே விஷ்ணுபத்ன்யை  ச தீமஹி  தந்நோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்."   "OM MAHALAKSHMAICHYA VIDMAHE VISHNU PATHNAICHYA  DHEEMAHI TANNO LAKSHMI PRACHODAYAT."                                                                          வாழ்க வளமுடன்.

பக்தர்களோடு கருட பகவானும் வந்து தரிசிக்கும் 2020 திருப்பதி திருமலை குடை ஊர்வலம் : சித்தர்க்கடியான், ஆசிரியர், TEMPLES OF TAMILAGAM

  பக்தர்களோடு கருட பகவானும் வந்து தரிசிக்கும் திருப்பதி திருமலை குடை ஊர்வலம் : சித்தர்க்கடியான், ஆசிரியர், TEMPLES OF TAMILAGAM                      குடைகளை காண பக்தர்கள் வந்து மகிழ; பாருங்கள் இந்த அதிசயத்தை, கருட பகவானும் வந்து குடைகளை தரிசிப்பதை. காண கண் கோடி வேண்டும் இந்த காணொளி காட்சியினை காண.                        இந்த வருடம் (2020) திருப்பதி குடை ஊர்வலம் கொரானாவினால் தடை செய்யபட்டதால், இன்று காலை 11 குடைகள் "பட்டாளம் ஆஞ்சநேயர் கோவிலில்" வைத்து யாகம் வளர்த்து, முறைபடி பூஜைகள் செய்யப்பட்டது. இதில் 2 குடைகள் திருப்பதி, திருச்சானூர் பத்மாவதி தாயார் சன்னதியில் சமர்பிக்கப்படும். பின்னர் மீதமுள்ள 9 குடைகள் திருமலை வெங்கடேச பெருமாள் சன்னதியில் சமர்ப்பிக்கப்படும். யான் பெற்ற அந்த வேங்கட நாயகன் அருளை, தாங்களும்  குடும்பத்துடன் பெற்று மகிழுங்கள்.

இந்து மதத்தில் உதித்த ஒரு இமயம் : என்றும் வழிபட வேண்டிய எங்கள் மகான், ஸ்ரீ நாராயணகுரு : சித்தர்க்கடியான், ஆசிரியர், TEMPLES OF TAMILAGAM

Image
இந்து மதத்தில் உதித்த ஒரு இமயம் : என்றும் வழிபட வேண்டிய எங்கள் மகான், ஸ்ரீ நாராயணகுரு : சித்தர்க்கடியான், ஆசிரியர், TEMPLES OF TAMILAGAM                      ஸ்ரீ நாராயணகுரு அவர்கள் கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் அருகில் உள்ள செம்பழந்தி என்னும் ஊரில் 1856 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி அன்று மதன் ஆசான் குட்டி, அம்மா தம்பதிக்கு மகனாக பிறந்தார். அப்படி அவர் செய்த சாதனைகள் தான் என்ன அவை எண்ணிலடங்கா                     ஆன்மீகத்தையும் பரப்புவதிலும்,  சமூகங்களுக்கு இடையே இருந்த ஏற்றத்தாழ்வுகளையும் சரி செய்வதிலும் ஒரு சேர வாழ்நாள் முழுவதும் பயணம் செய்தார். சிவன், விஷ்ணு, சக்தி போன்ற தெய்வங்களுக்கு எண்ணற்ற கோவில்களை நாடு முழுவதும் கட்டினார். எளிமையான வழிபாட்டு முறைகளையும் மக்களுக்கு போதித்தார்.                     இளம் வயதிலேயே துறவரம் பூண்ட அந்த மகான், ஏதோ ஒரு தேடுதலை நோக்கி பயணித்துக் கொண்டே இருந்தார் இறுதிவரை. அதை  கண்டறிந்து,  செல்லுமிடமெல்லாம் மக்களுக்கு நன்மைகளை போதித்தார்                      அவர் வாழ்ந்த கால கட்டத்தில், கேரள மாநிலத்தில் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்களை அனுமதிக்க மா

சட்ட நாத ஸ்வாமிகள் வழங்கும் இன்றைய (23.09.2020 : புரட்டாசி 07 : புதன்கிழமை) நாள் பலன்

Image
23.09.2020 : புரட்டாசி 07 : புதன்கிழமை வருடம் : சார்வரி வருடம் { சார்வரி நாம சம்வத்ஸரம் }. அயனம் : தக்ஷிணாயனம் . ருது : வர்ஷ ருதௌ . மாதம் : புரட்டாசி (கன்யா மாஸம்). பக்ஷம் : சுக்ல பக்ஷம். திதி : ஸப்தமி. ஸ்ரார்த்த திதி : ஸப்தமி. நாள் : புதன்கிழமை {ஸௌம்யவாஸரம்}.          நக்ஷத்திரம் : கேட்டை. யோகம் : சித்த யோகம். கரணம் : கரஜை , வணிஜை. நல்ல நேரம் : 09.15 AM TO 10.15 AM AND 04.45 PM TO 05.45 PM. ராகு காலம் : 12.00 PM TO 01.30 PM. எமகண்டம் : 07.30 AM TO 09.00 AM. குளிகை : 10.30 AM TO 12.00 PM. சூரிய உதயம் : காலை 06.03 AM. சூரிய அஸ்தமனம் : மாலை 06.04 PM. சந்திராஷ்டமம் : பரணி, கார்த்திகை.. சூலம் : வடக்கு . பரிகாரம் : பால்

23.09.2020 : புரட்டாசி 07 : புதன்கிழமை ஹோரைகள்

Image
  புதன்கிழமை ஓரை : காலை : 06 - 07 : புதன் : சுபம். 07 - 08 : சந்திரன் : சுபம். 08 - 09 : சனி : அசுபம். 09 - 10 : குரு : சுபம். 10 - 11 : செவ்வா : அசுபம். 11 - 12 : சூரியன் : அசுபம். பிற்பகல் : 12 - 01 : சுக்கிரன் : சுபம். 01 - 02 : புதன் : சுபம். 02 - 03 : சந்திரன் : சுபம். மாலை : 03 - 04 : சனி : அசுபம். 04 - 05 : குரு : சுபம். 05 - 06 : செவ்வா : அசுபம். 06 - 07 : சூரியன் : அசுபம்.   நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும் .

24.09.2020 : புரட்டாசி 08 : வியாழக்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : குரு பகவான் தட்சிணாமூர்த்தி.

Image
   இன்று  :  வியாழக்கிழமை.   வழிபட வேண்டிய கடவுள்  :   குரு பகவான், தட்சிணா மூர்த்தி. சொல்ல வேண்டிய  மூல  மந்திரம்  :   " ஸ்ரீ குருப்யோ நம :" "SRI GURUBHYO NAMAHA :"                                        சொல்ல வேண்டிய மந்திரம்  :   குரு மந்திரம்   " குரு பிரம்மா குரு விஷ்ணு  குரு தேவோ மஹேஸ்வர ! குரு சாட்சாத் பரப் பிரம்மா  தஸ்மை  ஸ்ரீ குருவே நம ஹ !!" "GURU BRAHMA GURU VISHNU GURU DEVO MAHESHWARAHA ! GURU SAAKSHAAT PARA BRAHMA TASMAI SRI GURUAVE NAMAH  !!"

23.09.20 : புரட்டாசி 07 : புதன்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : ஸ்ரீ மகா விஷ்ணு.

Image
     இன்று   :  புதன்கிழமை. வழிபட வேண்டிய கடவுள்  :  ஸ்ரீ மகா விஷ்ணு. சொல்ல வேண்டிய மந்திரம் : "ஓம் நமோ நாராயணாய :" "OM NAMO NARAYANAYA :" சொல்ல வேண்டிய  காயத்ரி  : விஷ்ணு காயத்ரி "ஓம் நாராயணாய வித்மஹே  வாசுதேவாய தீமஹி தந்நோ விஷ்ணு  ப்ரசோதயாத்."    "OM NARAYANAYA VIDMAHE  VAASUDEVAYA DHEEMAHI  TANNO VISHNU PRACHODAYAT."

"அனுதினமும் இறைவனை வணங்கி வந்தால், இறைவனை மறந்த அன்றும் கூட; இறைவன் நம்மை காக்க மறப்பதில்லை" : குணா

"அனுதினமும் இறைவனை  வணங்கி வந்தால், இறைவனை மறந்த அன்றும் கூட;  இறைவன் நம்மை காக்க மறப்பதில்லை"                  "TEMPLES OF TAMILAGAM" வாசகர்களுக்காக  ஒரு நல்ல குட்டிக் கதை. முருகேசு : கடவுளே..! நான் உங்க கிட்டே ஒரு விளக்கம் கேட்கலாமா ? கடவுள் : தாராளமாகக் கேள் மகனே.. முருகேசு : பொறுமையாக, கோபப்படாமல் பதில் சொல்வீர்களா ? கடவுள் : கண்டிப்பாக.. முருகேசு : இன்றைய தினம், ஏன் எனக்கு இப்படி ஒரு மோசமான நாளைக் கொடுத்தீங்க? கடவுள் : என்னப்பா சொல்ற நீ ? முருகேசு : எப்பவும் சரியா எழுந்திருக்கிற நான், இன்னைக்கு எழுந்திரிச்சதே லேட்.  கடவுள் : ஆமாம்..! அவசரத்துல என்னைக் கூட கும்பிடாம ஆபீஸ்க்கு புறப்பட்டுட்ட.. முருகேசு : கிளம்பினதே லேட். இதுல, என் பைக் வேற பஞ்சர் ஆகியிருந்தது. கடவுள் : ஆமாம், எனக்குத் தெரியும். முருகேசு : சரி, பஸ்ல போலாம்னு பஸ்ஸை பிடிச்சா; வழியில ஏதோ ஆக்சிடெண்ட் போல, ஒரே டிராஃபிக் ஜாம். ஆபீஸ்க்கு நான் ஒரு மணிநேரம் லேட். கடவுள் : ஆமாம், தெரியுமே. முருகேசு : மதியம் சாப்பிட கொஞ்சம் லேட் ஆயிருச்சு. அதுக்குள்ளே, கேண்டீன்ல சாப்பாடு காலியாயிருச்சு. கடைசில, பச

22.09.2020 : புரட்டாசி 06 : செவ்வாய்க்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : தமிழ்க்கடவுள் முருகப்பெருமான்.

Image
  இன்று : செவ்வாய்க்கிழமை. வழிபட வேண்டிய கடவுள் : தமிழ்க் கடவுள் முருகப்பெருமான். சொல்ல வேண்டிய மந்திரம் : "ஓம் சரவண பவ ." "OM SARAVANA BAVA." சொல்ல வேண்டிய காயத்ரி : சண்முக காயத்ரி "ஓம் தத்புருஷாய வித்மஹே  மஹாசேனாய தீமஹி  தந்நோ ஷண்முக ப்ரசோதயாத்." "OM DATHPURUSAYA VIDMAHE MAHA SENAYA DHEEMAHI TANNO SHANMUGA PRACHODAYAT." வாழ்க வளமுடன்

குழந்தைத்தனம், மற்றும் அமைதி 90'களில் பிறந்தவர்களிடம் இருப்பதற்கான ஜோதிடக் காரணம் : குணா.

            குழந்தை த் தனம், மற்றும் அமைதி 90'களில் பிறந்தவர்களிடம் இருப்பதற்கான ஜோதிடக் காரணம் : குணா                பொதுவாக ஜாதகத்தில் சனி வலுத்தவர்கள், லக்னம்; லக்னாதிபதியுடன் சனி பார்வை தொடர்பு சேர்கை பெற்றவர்கள், கேது வலுத்தவர்கள் அல்லது லக்னம் லக்னாதிபதியுடன் கேதுபகவான் தொடர்பு பெற்றவர்கள், சனி மற்றும் கேது ஒருவருக்கொருவர் பார்வை தொடர்பு சேர்க்கை பெற்றவர்கள், லக்னம்; லக்னாதிபதி சனி அல்லது கேதுவின் சாரத்தில் நிற்கும் ஜாதக அமைப்பு உடையவர்கள் பழமையை அதிகம் விரும்புவார்கள்.                அதேநேரத்தில்; என்னதான் இவர்கள் கோபுரத்தின் உச்சத்தில் சாதனை புரிந்து பிரபலமாக இருந்தாலும், தன்னை ஒரு சாதாரண மனிதராக காட்டிக்கொள்வர். அதேநேரத்தில், கடந்த காலத்தில் நடந்த நிகழ்வுகளை மறக்காதவர்களாக திகழ்வார்கள். இன்னும் சொல்லப்போனால், பழமை விரும்பிகளாக தன்னை அடையாளப்படுத்தி கொள்வார்கள்.                குறிப்பாக சொல்லப் போனால் 1990 களில் கோட்சாரத்தில் சனிபகவான் ஆட்சி வலுவிலும், கேதுபகவான் சனியுடன் தொடர்பு கொண்ட சூட்சம  வலுவிலும்  தொடர்பு கொள்வார்கள். அதனால் என்னவோ 90'S கிட்ஸ் என்று சொல்லப்படும்