குழந்தைத்தனம், மற்றும் அமைதி 90'களில் பிறந்தவர்களிடம் இருப்பதற்கான ஜோதிடக் காரணம் : குணா.

         குழந்தைத்தனம், மற்றும் அமைதி 90'களில் பிறந்தவர்களிடம் இருப்பதற்கான ஜோதிடக் காரணம் : குணா


            பொதுவாக ஜாதகத்தில் சனி வலுத்தவர்கள், லக்னம்; லக்னாதிபதியுடன் சனி பார்வை தொடர்பு சேர்கை பெற்றவர்கள், கேது வலுத்தவர்கள் அல்லது லக்னம் லக்னாதிபதியுடன் கேதுபகவான் தொடர்பு பெற்றவர்கள், சனி மற்றும் கேது ஒருவருக்கொருவர் பார்வை தொடர்பு சேர்க்கை பெற்றவர்கள், லக்னம்; லக்னாதிபதி சனி அல்லது கேதுவின் சாரத்தில் நிற்கும் ஜாதக அமைப்பு உடையவர்கள் பழமையை அதிகம் விரும்புவார்கள்.

            அதேநேரத்தில்; என்னதான் இவர்கள் கோபுரத்தின் உச்சத்தில் சாதனை புரிந்து பிரபலமாக இருந்தாலும், தன்னை ஒரு சாதாரண மனிதராக காட்டிக்கொள்வர். அதேநேரத்தில், கடந்த காலத்தில் நடந்த நிகழ்வுகளை மறக்காதவர்களாக திகழ்வார்கள். இன்னும் சொல்லப்போனால், பழமை விரும்பிகளாக தன்னை அடையாளப்படுத்தி கொள்வார்கள்.

            குறிப்பாக சொல்லப் போனால் 1990 களில் கோட்சாரத்தில் சனிபகவான் ஆட்சி வலுவிலும், கேதுபகவான் சனியுடன் தொடர்பு கொண்ட சூட்சம வலுவிலும் தொடர்பு கொள்வார்கள். அதனால் என்னவோ 90'S கிட்ஸ் என்று சொல்லப்படும் 90'களில் பிறந்தவர்கள் பழமை விரும்பியாகவும், கடந்தகால நிகழ்வுகளை மறக்காதவர்களாகவும், எளிமை விரும்பியாகவும், மீண்டும் பழமையான தருணங்களில் வாழ்கையை வாழ ஆசைப்படுகிறார்கள்.

            இன்னும் அந்த குழந்தைத்தனம், மற்றும் அமைதி 90'களில் பிறந்தவர்களிடம் இருக்கிறது என்றால் மேற்கூறிய கிரக சேர்க்கை அத்தகைய கோட்சாரத்தில் இருப்பது தான் காரணம்.

             தொடர்ந்து பேசுவோம் "குணா எழுதும் ஆன்மீக பக்கங்கள்" வாயிலாக "TEMPLES OF TAMILAGAM" மூலம்.

Comments

Popular posts from this blog

ஆவணி மூன்றாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : அருள்மிகு ஸ்ரீ ஆதி காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் சுவாமி திருக்கோவில், கெருகம்பாக்கம். : பகுதி1

ஆவணி இரண்டாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : ஸ்ரீபீடம் ஸ்ரீ பாலா சமஸ்தானம் திருக்கோயில், செம்பாக்கம் : பகுதி :4.

ஸ்ரீ வியாச சாந்தாலீஸ்வரர் திருக்கோவில், காஞ்சிபுரம் : சித்தர்க்கடியான்.