மருமகளின் மனசு : சித்தர்க்கடியான்.

                 மருமகளின் மனசு : சித்தர்க்கடியான்.

                "TEMPLES OF TAMILAGAM" வாசகர்களுக்காக "மருமகளின் மனசு " என்னவென்று தெரிந்து கொள்ள ஒரு கதை.

                தனது மாமியாரை பிடிக்காத ஒரு இளம் பெண் அழுது புரண்டு, தன் கஷ்டம் எல்லாம் தீர்த்திட வேண்டி. சிவனை நோக்கி விரதமிருந்தாள்.  தவமாய் தவம் கிடந்து, மெய் வருத்தி நாள்தோறும் பூஜை செய்தாள். அவளது தவத்தால்; மனம் இரங்கிய சிவபெருமான், ஒரு நாள் அவள் முன் தோன்றி, "மகளே! உனது மனவலிமையை மெச்சி மகிழ்ந்தேன்!! ஏதாவது ஒரு வரம் கேட்டு பெற்றுக்கொள்." என்றார். "அப்பனே...எனக்கு ஒரு வரம் போதாது, மூன்று வரம் வேண்டும்." என்று  அந்த பெண் கெஞ்சினாள்.

                "பெண் புத்தி பின் புத்தி !" என்று நினைத்து உள்ளுக்குள் நகைத்தார் சிவபெருமான். "சரி குழந்தாய் ! ஒரு கண்டிஷனுடன்   உனக்கு மூன்று வரங்கள் அளிக்கப்படும். கண்டிஷனை ஏற்றுக் கொள்கிறாயா?" என்று கேட்டார். அவளோ அழகாய் சம்மதித்தாள். பகவான் கண்டிஷனை கூறினார், "இதோ பார் மகளே! நீ எது கேட்டாலும் கிடைக்கும்!! ஆனால்,  உனக்கு கிடைப்பதுபோல் உன் மாமியாருக்கு பத்து மடங்கு அதிகமாக கிடைத்துவிடும்!! என்ன சொல்கிறாய்?" மிக்க மகிழ்ச்சியுடன் முகம்குளிர சம்மதித்தாள் மருமகள்.

                விதி யாரை விட்டது என்று எண்ணியபடி அவள் கேட்கும் வரத்தை கொடுக்க தயாரானார் சிவபெருமான்.

                முதல் வரம் : "எனக்கு 100 கோடி ரூபாய் வேண்டும்." மாமியாருக்கு ஆயிரம் கோடி கிடைத்தது! 

                இரண்டாவது வரம் : "இந்திய கண்டத்திலேயே  மிக அழகிய பெண்ணாக நான் மாறவேண்டும்." உலகிலேயே அதீத அழகான பெண்ணாக மாமியார் மாறினார்!

                மூன்றாவது வரம் : "எனக்கு மைல்டாக ஒரு ஹார்ட் அட்டாக் வேண்டும்." மாமியார் இதயம் வெடித்து செத்தாள்.

                சிவபெருமான் மூர்ச்சையானார். "யாருகிட்ட.....என்கிட்டையா?" என அந்த வரம் வாங்கிய மருமகள் நினைத்தாள்.

                தொடர்ந்து பேசுவோம் "சித்தர்க்கடியான் எழுதும் ஆன்மீக பக்கங்கள்" வாயிலாக "TEMPLES OF TAMILAGAM" மூலம்.

Comments

Popular posts from this blog

ஆவணி மூன்றாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : அருள்மிகு ஸ்ரீ ஆதி காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் சுவாமி திருக்கோவில், கெருகம்பாக்கம். : பகுதி1

ஆவணி இரண்டாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : ஸ்ரீபீடம் ஸ்ரீ பாலா சமஸ்தானம் திருக்கோயில், செம்பாக்கம் : பகுதி :4.

ஸ்ரீ வியாச சாந்தாலீஸ்வரர் திருக்கோவில், காஞ்சிபுரம் : சித்தர்க்கடியான்.