உங்களின் எண்ணங்கள் நிறைவேற வாழ்க்கை சிறக்க "சிவன் துதி" துதியுங்கள் : மூலிகை வசிய மை "வாராகி".

உங்களின் எண்ணங்கள் நிறைவேற வாழ்க்கை சிறக்க இதை துதியுங்கள் : மூலிகை வசிய மை "வாராகி".

                    எண்ணங்களால் உருவாக்கப்பட்டவனாக மனித இனம் இருக்கிறது. எண்ணங்களில் நல்லவை மற்றும் தீயவை என்று இருவகை உண்டு. இதில்; நாம் நல்ல எண்ணங்கள் கொண்டிருந்தாலும், அவை எல்லாமே நிறைவேறிவிடுவதில்லை. நமது விருப்பங்கள், எண்ணங்கள் நிறைவேற இறைவனின் அருளும் நமக்கு இன்றியமையாததாகிறது. அதற்கான ஒரு சக்தி வாய்ந்த சிவன் துதி தான் இது. இந்த சிவன் துதி ஜெபிப்பதால் உண்டாகும் மேலும் பல நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

சிவன் துதி :

"ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் சர்வ

மங்கலாய பிங்களாய ஓம் நமஹ."

உயிர்கள் அனைத்தையும் காப்பவரான சிவ பெருமானுக்குரிய சிவ துதி இது. இந்த துதியை தினமும் காலை எழுந்து குளித்து முடித்ததும், சிவனை மனதில் நினைத்து 27 முறை இந்த துதியை பாராயணம் செய்வது உங்கள் வாழ்வில் பல நல்ல மாற்றங்களை உண்டாக்கும். பிரதோஷம், மாத சிவராத்திரி, மகா சிவராத்திரி போன்ற தினங்களில் சிவாலயங்களுக்கு சென்று இத்துதியை 108 முறை அல்லது 1008 முறை பாராயணம் செய்வதால்; நீங்கள் எண்ணிய காரியங்கள் ஈடேறும், காரிய தடை, தாமதங்கள் விலகும், உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும்.

Comments

Popular posts from this blog

ஆவணி மூன்றாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : அருள்மிகு ஸ்ரீ ஆதி காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் சுவாமி திருக்கோவில், கெருகம்பாக்கம். : பகுதி1

ஆவணி இரண்டாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : ஸ்ரீபீடம் ஸ்ரீ பாலா சமஸ்தானம் திருக்கோயில், செம்பாக்கம் : பகுதி :4.

ஸ்ரீ வியாச சாந்தாலீஸ்வரர் திருக்கோவில், காஞ்சிபுரம் : சித்தர்க்கடியான்.