ஆவணி மூன்றாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : அருள்மிகு ஸ்ரீ ஆதி காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் சுவாமி திருக்கோவில், கெருகம்பாக்கம். : பகுதி1

 

அருள்மிகு ஸ்ரீ ஆதி காமாட்சி அம்மன் உடனுறை  ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் சுவாமி திருக்கோவில், கெருகம்பாக்கம்.

கேது பரிகார ஸ்தலம்.



                நவ கிரகங்களில் கடைசி கிரகமான கேது பகவான், போரூரில் இருந்து குன்றத்தூர் செல்லும் வழியில் கெருகம்பாக்கத்தில், ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் சுவாமி ஆக “அருள்மிகு ஸ்ரீ ஆதி காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் சுவாமி திருக்கோவில்” எனும் திருத்தலத்தில் வீற்று இருக்கிறார். திரு நீலகண்டேஸ்வரர் ஸ்வாமியே, கேது பகவானாக வருகிற பக்தர்களுக்கு அருள் பாலித்து கொண்டு இருக்கிறார். அதனால், இங்கு கேது பகவானுக்கு என்று தனி சன்னதி இல்லை.


                பாம்பினுடைய தலை கேதுவாக, லிங்க வடிவத்தில் பாகமாக உள்ளது. பாம்பினுடைய உடல் பகுதி ஆவுடையாரை சுற்றி வளர்ந்து உள்ளது. நீர் ஊற்றும் இடத்தில், பாம்பினுடைய வால் பகுதி முடிவு பெற்று உள்ளது. ஆகையால்; இந்த திரு நீலகண்டேஸ்வரரை, கேது பகவான் என்று வழிபட்டு கொண்டு இருக்கிறோம்.

           ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் சுவாமி

                 மூலவர் ஆக வீற்று இருக்கும் இந்த திரு நீலகண்டேஸ்வரரும், மகா மண்டபமும் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகியன சேர்ந்து தொண்டை மண்டலமாக இருந்த காலத்தில் இருந்தே; இந்த மூலவரை மக்கள் வழிபட்டு வந்துள்ளதாக வரலாறு சொல்கிறது.

அமைவிடம் : 

            

அருள்மிகு ஸ்ரீ ஆதி காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் சுவாமி திருக்கோவில், 

கெருகம்பாக்கம், 

சென்னை – 600 122. 

(போரூரில் இருந்து குன்றத்தூர் செல்லும் வழியில்; பாய்க் கடை பேருந்து நிறுத்தத்திற்கு அடுத்த பேருந்து நிறுத்தம், கெருகம்பாக்கம்).
             

    
                        
                    

ராகு, கேது பெயர்ச்சி - 2020 :

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்தீ ஸ்ரீ சார்வாரி வருடம் ஆவணி மாதம் 6- ம் தேதி; 01.09.2020,  செவ்வாய்க் கிழமை மதியம் 02.16 க்கு,  “ராகு பகவான் மிதுன ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்”, “ கேது பகவான் தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்”.  







நாளையும் தொடரும்.........

Comments

Popular posts from this blog

ஆவணி இரண்டாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : ஸ்ரீபீடம் ஸ்ரீ பாலா சமஸ்தானம் திருக்கோயில், செம்பாக்கம் : பகுதி :4.

ஸ்ரீ வியாச சாந்தாலீஸ்வரர் திருக்கோவில், காஞ்சிபுரம் : சித்தர்க்கடியான்.