ஸ்ரீ கால தேவி நேர கோயில் : மூலிகை வசிய மை "வாராகி".

ஸ்ரீ கால தேவி நேர கோயில் : மூலிகை வசிய மை "வாராகி".

தெய்வம் : காலதேவி.

அமைந்துள்ள இடம்: எம்.சுப்புலாபுரம் அருகில் உள்ள சிலார்பட்டி கிராமம், மதுரை மாவட்டம்.

இரவில் திறந்திருக்கும் கோயில்.

மற்ற கோயில்களைப் போல் பகல் பொழுதில் திறந்து, இரவில் மூடப்படும் கோயிலாக இல்லாமல், சூரிய அஸ்தமனத்தின் போது திறக்கப்பட்டு, சூரிய உதயம் ஆவதற்கு முன்னர் நடை சாத்தப்படுகின்ற வித்தியாசமான கோயிலாக இது உள்ளது.

பக்தர்களின் தரிசனத்திற்காக இரவு முழுவதும் திறந்திருக்கும் அதிசய கோயிலாக உள்ளது. இரவு முழுவதும் திறந்திருக்கும் உலகில் உள்ள ஒரே கோயில் என்றால் இதுவாக தான் இருக்கும்.

விசேஷ தினங்கள்:

                    இந்த ஆலயத்தில் காலதேவிக்கு உகந்த பெளர்ணமி, அமாவாசை தினங்களில் பக்தர்களின் கூட்டம் மிக அதிகளவில் வந்து வழிபட்டு செல்கின்றனர்.

கெட்ட நேரம் விலக என்ன செய்வது?

                   "இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் கோயிலை வலதிலிருந்து இடது புறமாக 11 முறை சுற்றி பின்னர், 11 முறை இடதிலிருந்து வலப்புறமாக சுற்றி வந்து, ஸ்ரீகாலதேவிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட 11 நெய்விளக்கேற்றிய பின் கோயிலுக்குள்ளே சென்று கருவறைக்கு முன் உள்ள காலச்சக்கரத்தின் மீது அமர்ந்து 11 விநாடிகள் நின்று காலதேவிக்கு நேருகு நேராக நின்று தரிசனம் செய்தால் போதும், அவர்களின் அனைத்து கெட்ட நேரமும் நீங்கி, நல்ல நேரம் பிறக்கும்," என்பது தான் இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.

                    இங்கு வரும் பக்தர்கள், 'தனக்கு இதைக் கொடு, அதைகோடு' என வேண்டுவதற்கு பதிலாக, காலதேவியிடம் ‘எனக்கு எது நல்லதோ அதைக் கொடு, நல்ல நேரத்தைக் கொடு’ என வேண்டினாலே போதும். அதே போல் கோரிக்கை நிறைவேற 3 பெளர்ணமி, 3 அமாவாசை கோயிலுக்கு சென்று காலதேவியை வணங்கினால் பில்லி, சூனியம், ஏவல், தீராத வியாதிகள் என அனைத்து பிரச்னைகளும் தீரும்.

எப்படி செல்லலாம்:

                    மதுரையிலிருந்து ராஜபாளையம் செல்லும் பேருந்தில் சென்றால்; சுப்பலாபுரம் மெயின் ரோட்டில் இறங்கி, இந்த கோயிலுக்கு ஆட்டோ அல்லது நடந்தே கூட கோயிலை அடைய முடியும்.

                    போக்குவரத்து வசதிகள் சாதாரண நாட்களில் அதிகம் இல்லாததால், முதலில் செல்பவர்கள் பெளர்ணமி அல்லது அமாவாசை தினங்களில் சென்றால், போக்குவரத்து எளிதாக இருக்கும்.

Comments

Popular posts from this blog

ஆவணி மூன்றாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : அருள்மிகு ஸ்ரீ ஆதி காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் சுவாமி திருக்கோவில், கெருகம்பாக்கம். : பகுதி1

ஆவணி இரண்டாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : ஸ்ரீபீடம் ஸ்ரீ பாலா சமஸ்தானம் திருக்கோயில், செம்பாக்கம் : பகுதி :4.

ஸ்ரீ வியாச சாந்தாலீஸ்வரர் திருக்கோவில், காஞ்சிபுரம் : சித்தர்க்கடியான்.