சுக்கிர யோகம் அடித்து, சுகபோகமான வாழ்க்கையை பெற்றுத்தரும் காமாட்சி அம்மன் தீபம் : மூலிகை வசிய மை "வாராகி".

பூஜை அறையில்; காமாட்சி அம்மன் விளக்கை இப்படி ஏற்றினால், "வீட்டில் வறுமை வருவதற்கு வாய்ப்பே இல்லை". சுக்கிர யோகம் அடித்து, சுகபோகமான வாழ்க்கையை பெற்றுத்தரும் காமாட்சி அம்மன் தீபம் : மூலிகை வசிய மை "வாராகி".

                    நமக்கு வாழ்க்கையில் சுக்கிர யோகம் அடித்து விட்டாலே போதும், சுகபோக வாழ்க்கையை, சுலபமான முறையில் செல்வ செழிப்போடு, பெற்றுவிடலாம். சுக்கிர பகவானின் அருளை பெறுவதற்கு பல வகையான பரிகாரங்கள் இருந்தாலும், நாம் எல்லோரும் செய்யக் கூடிய மிக, மிக சுலபமான வழிபாட்டை பற்றி, இன்று தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த தீபத்தை; உங்களுடைய வீட்டில் ஏற்றி வந்தால், "வறுமையானது நெருப்போடு நெருப்பாக பொசுங்கி, தீப ஒளியில் உங்களுடைய வாழ்க்கை பிரகாசமாக மாறுவதை நிச்சயம் உணர முடியும்". அதுவும் மிக, மிக குறைந்த நாட்களில் நல்ல மாற்றத்தை பெற, "வீட்டில் அரிசி, பருப்பு வாங்க கூட கையில் காசு கிடைக்க பிரச்சினையாக உள்ளது" என்பவர்கள், கொஞ்சம் கஷ்டப்பட்டு, இந்த தீபத்தை ஏற்றி பாருங்கள். கை மேல் பலன் நிச்சயம் கிட்டும்.

சுக்கிர பகவானுக்கு உரிய பூ குங்குமப்பூ. சுக்கிர பகவானுக்கு உரிய உலோகம் வெள்ளி. சுக்கிர பகவானுக்கு உரிய தானியம் மொச்சை. இந்த இடத்தில் கட்டாயம் எல்லோருக்கும் கேள்வி வரும், "அரிசி, பருப்பு வாங்க முடியாதவர்கள் குங்குமப்பூவும், வெள்ளி விக்கும், வெள்ளி கிண்ணமும் எப்படி வாங்குவது?" என்று. இருந்தாலும், கொஞ்சம் கஷ்டப்பட்டு, சிரமத்தோடு சிரமமாக, இந்த பொருட்களையும் வாங்கி வைத்து, வீட்டில் தீப வழிபாட்டை செய்து பாருங்கள். கை மேல் பலன் நிச்சயம் கிட்டும். 

                    சிலபேருக்கு; தேவைக்கு ஏற்ப, அன்றாட தினசரி செலவுக்கு ஏற்ப, வருமானம் வந்து கொண்டிருக்கும். பெரும்பாலும், வெள்ளி காமாட்சி அம்மன் விளக்கு இல்லாத வீடுகள் இப்போது இல்லை. பணத்தை சேமிக்க முடியாமல், வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்ல முடியாதவர்கள், இந்த தீப வழிபாட்டை தினமும் வீட்டில் செய்து வரலாம், கை மேல் பலன் நிச்சயம் கிட்டும்.

                    கடைகளில்; இப்போது 'குங்குமப்பூ எண்ணெய்' என்றே விற்கின்றது. முடிந்தால், அந்த குங்குமப்பூ எண்ணெயை வாங்கி வைத்து, வாரத்தில் ஒரு முறை, வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு வீட்டில் இருக்கும் வெள்ளியினால் செய்யப்பட்ட விளக்கில், இந்த குங்குமப்பூ எண்ணெயை ஊற்றி, முடிந்தால் தாமரை திரி போட்டு தீபம் ஏற்றுங்கள். இல்லை என்றால், பஞ்சு திரி போட்டு தீபத்தை ஏற்றலாம். வெள்ளியில் காமாட்சி அம்மன் விளக்கில் தான் இந்த தீபம் ஏற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. வெள்ளியில் செய்யப்பட்ட எந்த விளக்காக இருந்தாலும், அதில் இந்த தீபத்தை ஏற்றலாம்.

                    குங்குமப்பூ எண்ணெய் உங்களால் வாங்க முடியவில்லை என்றால், சுத்தமான குங்குமப்பவை உங்களுடைய வீட்டில் வாங்கி வைத்துக் கொள்ளலாம். வெள்ளி விளக்கில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி, அதில் இரண்டு குங்குமப்பூவை போட்டு, வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு தீபம் ஏற்றலாம். வெள்ளிக்கிழமை இந்த தீபத்தை ஏற்றி முடித்த பின்பு, விளக்கில் இருக்கும் குங்குமப்பூவை எடுத்து தனியாக ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். இந்த பழைய குங்குமப்பூவை, வாரம் வாரம் வரும் வெள்ளிக்கிழமைகளில் பயன்படுத்திக் கொள்ளலாம். மூன்று மாதத்திற்கு ஒரு முறை, இந்த குங்குமப்பூவை புதியதாக மாற்றினாலே போதும்.

                    இந்த தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு, ஒரு சிறிய வெள்ளி கிண்ணம், வெள்ளி டம்ளர் எது உங்க வீட்டில் இருக்கின்றதோ, அதன் உள்ளே ஒரு கைப்பிடி அளவு மொச்சையை போட்டு, சுக்கிர பகவானுக்கு படைத்து விடுங்கள். அதன் பின்பு, அந்த மொச்சையை எடுத்து சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைத்து, பறவைகளுக்கு தானியமாக சாப்பிட கொடுத்து விடுங்கள், இல்லையென்றால் பசுமாட்டிற்கு கொடுத்து விடுங்கள்.

                    "வெள்ளிக்கிழமை அன்று, சுக்கிரனுக்கு உரிய இந்த இரண்டு பரிகாரங்களை, உங்களுடைய வீட்டில் செய்து வரும் பட்சத்தில், வீட்டில் இருக்கும் எப்படிப்பட்ட வறுமையும், படிப்படியாக குறையும்" என்று சொல்லப்பட்டுள்ளது. நம்பிக்கையுள்ளவர்கள், நம்பிக்கையோடு தீப வழிபாட்டை செய்து, பலன் பெறலாம்.

Comments

Popular posts from this blog

ஆவணி மூன்றாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : அருள்மிகு ஸ்ரீ ஆதி காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் சுவாமி திருக்கோவில், கெருகம்பாக்கம். : பகுதி1

ஆவணி இரண்டாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : ஸ்ரீபீடம் ஸ்ரீ பாலா சமஸ்தானம் திருக்கோயில், செம்பாக்கம் : பகுதி :4.

ஸ்ரீ வியாச சாந்தாலீஸ்வரர் திருக்கோவில், காஞ்சிபுரம் : சித்தர்க்கடியான்.