'எப்போதும் மந்திரத்தையோ, நாமத்தையோ உச்சரித்துக் கொண்டிருப்பது "அஜபா" : மூலிகை வசிய மை "வாராகி".

எப்போதும் மந்திரத்தையோ, நாமத்தையோ உச்சரித்துக் கொண்டிருப்பது அஜபா : மூலிகை வசிய மை "வாராகி".

எப்போதும் மந்திரத்தையோ, நாமத்தையோ உச்சரித்துக் கொண்டிருப்பது "அஜபா". விழித்திருக்கும்போதும், தூங்கும்போதும், எந்நேரமும், எப்போதும், உச்சரித்துக் கொண்டிருப்பது, "அஜபா".

இருதயத்தில் இறைவனை உணரும்வரை, உச்சரித்துக் கொண்டிருப்பது. இந்த "அஜபா" ஜபம். உடல், மனம், ஆத்மா,  உங்கள் உடல் செல்கள் அனைத்திலும் ஊடுருவி பாயும். இறைவனுக்கும நமக்கும் இடைவிடாத தொடர்பு கிடைக்கும். 

 இதற்கு உதாரணமாக,  'ராம்-அனுமனை' சொல்லலாம். சீதாதேவிக்கு  எப்போதும் அனுமன் மீது சிறிது பொறாமை. ஏனெனில், ராமனும்; சீதாவும் ஒன்றாக இருக்கும் போது, அனுமன் வந்துவிட்டால் கூட, ராமன் அனுமனையே கண்களால் பார்த்துக் கொண்டிருப்பார். இதை, ஒருநாள் ராமன் கண்டுபிடித்து விட்டார்.

                     அனுமனின் உடலிலிருந்து ரோமத்தை பிய்த்து, சீதாவின் காதருகில் கொண்டு சென்றார். அந்த ரோமத்திலிருந்து, 'ராம்....ராம்....' என்ற ஓசை கேட்டுக் கொண்டேயிருந்தது. ராமர் சொன்னார், "இப்போது புரிகிறதா சீதா, நான் அவனைப் பார்க்கவில்லை. அவன் உறுதியான ஜபம், அவனுள் பரவி, அது என்னை தானாக அவன் பக்கம் இழுக்கிறது." என்று.

                    ஆதலினால்; எந்த மந்திரமாக இருந்தாலும், அதனை முழு மனோதோடு, தினசரி சொல்லிக் கொண்டு இருந்தால், அந்த மந்திரத்திற்கான அதிபதி கடவுள் நிச்சயம் உங்களை பார்த்து கொண்டு இருப்பார். அதாவது உங்களை ஆசிர்வதித்து கொண்டு இருப்பார்.

                    ஸ்ரீ குருப்யோ நமஹ.  

Comments

Popular posts from this blog

ஆவணி மூன்றாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : அருள்மிகு ஸ்ரீ ஆதி காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் சுவாமி திருக்கோவில், கெருகம்பாக்கம். : பகுதி1

ஆவணி இரண்டாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : ஸ்ரீபீடம் ஸ்ரீ பாலா சமஸ்தானம் திருக்கோயில், செம்பாக்கம் : பகுதி :4.

ஸ்ரீ வியாச சாந்தாலீஸ்வரர் திருக்கோவில், காஞ்சிபுரம் : சித்தர்க்கடியான்.