தென்னாங்கூர் ஸ்ரீ ராதே கிருஷ்ணா ஆலயத்தில் பாண்டுரங்கன் ருக்மணிக்கு நடந்த ஆருத்ரா பௌர்ணமி கால வெண்ணெய்க் காப்பு அலங்கார பூஜையின் காணொளி க் காட்சி : சித்தர்க்கடியான்.

 

தென்னாங்கூர்  ஸ்ரீ ராதே கிருஷ்ணா ஆலயத்தில் நடந்த ஆருத்ரா பௌர்ணமி கால பூஜையின் காணொளி க் காட்சி  : சித்தர்க்கடியான்.

                   தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தென்னாங்கூர்  "ஸ்ரீ ராதே கிருஷ்ணா" ஆலயத்தில் நடந்த "ஆருத்ரா பௌர்ணமி" கால பூஜையின் காணொளி க் காட்சியை தான் நாம் கண்டு கண்ணன் அருள் பெற போகிறோம். ராதை மற்றும் கண்ணன் அருளால் நோய் நொடி இல்லாத நீண்ட ஆரோக்கிய வாழ்வு நம் பகதர்கள் அனைவருக்கும் கிடைக்க எல்லாம் வல்ல கிருஷ்ணனை வணங்குகிறோம்    
                    அதே போல் மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தோடு வருகின்ற பௌர்ணமி அன்று தான் "ஆருத்ரா தரிசனம்" நடைபெறுகிறது. குருநாதர் ஞானாந்த கிரி ஸ்வாமிகள் சித்தி ஆனதும் ஒரு ஆருத்ரா நாளில் தான். ஒவ்வொரு வருடமும் எம்பெருமான் பாண்டுரங்கன், ருக்மணிக்கு வெண்ணெய்க் காப்பு நடைபெறும். இந்த வருடம் நடைபெற்ற அந்த வெண்ணெய்க் காப்பு அலங்காரத்தில் பாண்டுரங்கனையும்  அம்மையையும் காண கண் கோடி வேண்டும். 



                    இந்த ஆண்டு ஆருத்ரா தரிசனம் 29.12.2020 அன்று வெகு சிறப்பாக தென்னாங்கூர்  "ஸ்ரீ ராதே கிருஷ்ணா" ஆலயத்தில் நடைபெற்றது.  
      
                    அத்தகைய இந்த புனிதமான நன்னாளில், உலகம் முழுவதிலும் உள்ள நம் TEMPLES OF TAMILAGAM வாசகர்களின் இல்லங்களுக்கு; இந்த காணொளி காட்சி மூலமாக தென்னாங்கூர்  ஸ்ரீ ராதே கிருஷ்ணா ஆலயத்தில் பாண்டுரங்கன் ருக்மணிக்கு நடந்த ஆருத்ரா பௌர்ணமி கால வெண்ணெய்க் காப்பு அலங்கார பூஜையின் காணொளிக் காட்சியினை கொண்டு வந்து சேர்க்கிறோம். கோவிட் பெருந்தொற்று காரணமாக நேரில் தரிசிக்க இயலாத மாயக்கண்ணனின் அன்பில் மயங்கும்  பக்தர்களுக்காக இந்த காணொளிக் காட்சியினை தருவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். 

ஹரே ராமா ! ஹரே கிருஷ்ணா !!
 

Comments

Popular posts from this blog

ஆவணி மூன்றாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : அருள்மிகு ஸ்ரீ ஆதி காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் சுவாமி திருக்கோவில், கெருகம்பாக்கம். : பகுதி1

ஆவணி இரண்டாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : ஸ்ரீபீடம் ஸ்ரீ பாலா சமஸ்தானம் திருக்கோயில், செம்பாக்கம் : பகுதி :4.

ஸ்ரீ வியாச சாந்தாலீஸ்வரர் திருக்கோவில், காஞ்சிபுரம் : சித்தர்க்கடியான்.