உலகின் முதல் சிவன் கோவிலில் நடைபெற்ற ஆருத்ரா தரிசன அபிஷேக காணொளிக் காட்சி : சித்தர்க்கடியான்.

உலகின் முதல் சிவன் கோவிலில் நடைபெற்ற ஆருத்ரா தரிசன அபிஷேக காணொளிக் காட்சி  : சித்தர்க்கடியான்.

                    சிதம்பரம் எனப்படும் தில்லையில் "ஆருத்ரா" அன்று தரிசனம் செய்வது மிக்க பாக்கியம். ஆனால், தில்லைக்கும் முந்தைய காலத்தை சேர்ந்ததும்; ஊழிப் பெருக்கின் போது உயிர்ததுமான; "உத்தரகோசமங்கை"யில் அம்மைக்கு ஆனந்த தாண்டவத்தை ஆண்டவன் அரங்கேற்றி காண்பித்தான். அத்தகைய உத்தரகோசமங்கை ஈசனை பணிவோம்.
 
                    ஒவ்வொரு மாதத்திலும் வரும் பௌர்ணமி ஒவ்வொரு விதத்தில் விஷேசம் ஆனது. சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமியை "சித்ராபௌர்ணமி" என்று அழைப்போம். அந்த சித்ராபௌர்ணமி நன்னாளில் தான், கள்ளழகர் மதுரையில் வைகை ஆற்றில் இறங்குவார். அதே போல் கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமியை தான் "திருக்கார்த்திகை" என்று நாம் கொண்டாடுகிறோம். அந்த நன்னாளில் தான், திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரருக்கு கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. அதே போல் மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தோடு வருகின்ற பௌர்ணமி அன்று தான் "ஆருத்ரா தரிசனம்" நடைபெறுகிறது. அந்த நன்னாளில் தான், வருடத்திற்கு ஓரே ஒரு முறையாக சந்தன காப்பு இல்லாமல் நடராஜரை உத்திரகோசமங்கையில் தரிசிக்க முடியும்.

                    இந்த "ஆருத்ரா" நாளில் தான் வேத மந்திரங்கள் இறைவனை நாடி வரும் பக்தர்களிடம் வந்தடையும் என ஆன்மீக நூல்கள் கூறுகின்றன. இந்த ஆண்டு ஆருத்ரா தரிசனம் 29.12.2020 அன்று வெகு சிறப்பாக உத்திரகோசமங்கை ஆலயத்தில் நடைபெற்றது.  முனிவர்களின் அகந்தையை ஒழிக்க "ருத்ர தாண்டவம்" ஆடிய எம்பெருமான் பிறகு தனது கோபம் தணிந்ததும் அதே முனிவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க "ஆனந்த தாண்டவம்" ஆடிய நாளே "ஆருத்ரா" எனப்படுகிறது.  உலகின் முதல் சிவன் கோவில் ஆன, "உத்திரகோசமங்கை"யில் நடந்த இந்த ஆருத்ரா தரிசனத்தை காணுவதற்கு பெரும் பாக்கியம் செய்து இருக்க வேண்டும். மரகத நடராஜரை தரிசித்து, மனதின் வேண்டுதல்களை நிறைவேற்ற பிரார்த்திப்போம்.
      
                    அத்தகைய இந்த புனிதமான நன்னாளில், உலகம் முழுவதிலும் உள்ள நம் TEMPLES OF TAMILAGAM வாசகர்களின் இல்லங்களுக்கு; இந்த காணொளி காட்சி மூலமாக "உத்திரகோசமங்கை ஆலய அபிஷேக"த்தை கொண்டு வந்து சேர்க்கிறோம். கோவிட் பெருந்தொற்று காரணமாக நேரில் தரிசிக்க இயலாத எம்பெருமான் சிவனின் பக்த்தர்களுக்காக இந்த காணொளிக் காட்சியினை தருவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். 

ஈசன் அடி போற்றி ! எந்தை அடி போற்றி !!  
 

Comments

Popular posts from this blog

ஆவணி மூன்றாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : அருள்மிகு ஸ்ரீ ஆதி காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் சுவாமி திருக்கோவில், கெருகம்பாக்கம். : பகுதி1

ஆவணி இரண்டாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : ஸ்ரீபீடம் ஸ்ரீ பாலா சமஸ்தானம் திருக்கோயில், செம்பாக்கம் : பகுதி :4.

ஸ்ரீ வியாச சாந்தாலீஸ்வரர் திருக்கோவில், காஞ்சிபுரம் : சித்தர்க்கடியான்.