ஸ்ரீ கிருஷ்ணர் அவதாரத்தோடு தொடர்புடைய பழமொழி : "காரியம் ஆகணும்னா, கழுதையானாலும் காலை பிடி." : சித்தர்க்கடியான்.

 ஸ்ரீ கிருஷ்ணர் அவதாரத்தோடு தொடர்புடைய பழமொழி : "காரியம் ஆகணும்னா, கழுதையானாலும் காலை பிடி." : சித்தர்க்கடியான். 

                    கம்சன் தன் தங்கை தேவகிக்கு பிறக்கும் எட்டாவது குழந்தையால் தன் உயிருக்கு ஆபத்து என தெரிந்தவுடன்; கணவன் ,மனைவி இருவரையும் சிறையில் அடைத்தான். இவர்களுக்கு குழந்தை பிறக்கும் சமயம், ஒரு கழுதையை சிறை வாசலில் கட்டி வைத்தான்.சிறைக்காவலர்களை அவன் நம்பவில்லை.

                    கழுதைக்கு நுகரும் சக்தி மிக அதிகம். குழந்தை பிறந்ததும் கத்த துவங்கி விடும். கம்சன் வந்து கொன்று விடுவான். இப்படி ஏழு குழந்தைகள் இறந்தன. எட்டாவது குழந்தையாக கிருஷ்ணர் பிறக்கிறார். உடனே, தேவகி கணவன் வசுதேவன், "தயவு செய்து கத்தி விடாதே." என கழுதை காலில் விழுந்து கெஞ்சினான். கழுதையும் கத்தவில்லை. கிருஷ்ணர் அவதாரம் நிகழ்ந்தது. எனவே தான், "காரியம் ஆகணும்னா, கழுதையானாலும் காலை பிடி." என்ற பழமொழி வந்தது !!

கர்நாடகாவில் அமிர்தாபுரத்து அமிர்தேஷ்வரான கோவிலில் வெளிச்சுவரில் வசுதேவர் கழுதை காலில் விழும் சிற்பம் உள்ளது. அந்த அரிய சிற்பத்தை தான் மேல உள்ள படத்தில் காண்கிறோம். 


Comments

Popular posts from this blog

ஆவணி மூன்றாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : அருள்மிகு ஸ்ரீ ஆதி காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் சுவாமி திருக்கோவில், கெருகம்பாக்கம். : பகுதி1

ஆவணி இரண்டாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : ஸ்ரீபீடம் ஸ்ரீ பாலா சமஸ்தானம் திருக்கோயில், செம்பாக்கம் : பகுதி :4.

ஸ்ரீ வியாச சாந்தாலீஸ்வரர் திருக்கோவில், காஞ்சிபுரம் : சித்தர்க்கடியான்.