சனீஸ்வரர் பரிகார ஸ்தலம் : அருள்மிகு ஸ்ரீ ஆனந்தவல்லி தாயார் சமேத அகத்தீஸ்வரர் சுவாமி திருக்கோவில், பொழிச்சலூர் : சித்தர்க்கடியான்.

சனீஸ்வரர் பரிகார ஸ்தலம் : அருள்மிகு ஸ்ரீ ஆனந்தவல்லி தாயார் சமேத அகத்தீஸ்வரர் சுவாமி திருக்கோவில், பொழிச்சலூர் : சித்தர்க்கடியான்.

 "சின்" முத்திரையோடு சனி பகவான் தனி சன்னதியில் வீற்று அருள் பாலிக்கும் இரண்டு திருத்தலங்கள் திருநள்ளாறு மற்றும் இந்த பொழிச்சலூர்.


     
                நமக்கெல்லாம் ஏழரை நாட்டு சனியாகவும், ஜென்ம சனியாகவும், பொங்கு சனியாகவும், அஷ்டமத்து சனியாகவும் வந்து கஷ்டங்கள் மூலம் நம்மை பக்குவப்படுத்தும் சனி பகவான், சென்னைக்கு அருகாமையில் வீற்று இருக்கும் ஒரே ஸ்தலம். 

மக்களை பிடிப்பதன் விளைவாக, தனக்கு பிடித்த பாவங்களை போக்கி கொள்ள "நள்ளார் தீர்த்தம்" எனும் தீர்த்தத்தை உருவாக்கி ஈஸ்வரனை வேண்டி சனி பகவான் பாவ விமோச்சனம்  பெற்ற ஸ்தலம்.
                அகத்தியர் நாடி ஜோதிடத்தில், பாவ விமோச்சனம் செய்ய முக்கியமான பரிகார ஸ்தலமாக "அருள்மிகு ஸ்ரீ ஆனந்தவல்லி தாயார் சமேத அகத்தீஸ்வரர் சுவாமி திருக்கோவில்", பொழிச்சலூர் கூறப்பட்டு உள்ளது. 

அகத்தியர் இத்தலத்தில் உள்ள ஈஸ்வரனை வழிபட்ட காரணத்தினால் இத்தல ஈஸ்வரன் "அகத்தீஸ்வரர்" என்ற திரு நாமத்தால் அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் ஈஸ்வரரோடு வீற்று இருந்து அருள் பாலிப்பவள் ஆனந்த வள்ளி தாயார்.
ஸ்ரீ ஆனந்தவல்லி தாயார் சமேத அகத்தீஸ்வரர் சுவாமி

அத்தகைய திருத்தலத்தினை புகைப்படங்களின் தொகுப்பாக நம் "TEMPLES OF TAMILAGAM" வாசகர்களுக்கு தருவதில் மிக்க பெருமிதம் கொள்கின்றோம்.

இன்று (27.12.2020) காலை நடைபெற்ற சனிப் பெயர்ச்சி வரும் இரண்டரை ஆண்டிற்கு நம் வாசகர்களுக்கு நற்பலன்களை வழங்க வேண்டும் என எல்லாம் வல்ல ஈஸ்வரனை பிரார்த்திக்கிறோம்.
           
                "புகழ் சோழ நல்லூர்" என சோழர் காலத்தில் அழைக்கப்பட்ட புகழ்பெற்ற சோழர் காலத்து பழமையான நகரம் தான் இந்த பொழிச்சலூர். 
"வட திருநள்ளாறு" என்று அழைக்கப்படும் இந்த தலம் 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த திருத்தலம். சோழ மன்னர்களால் "கஜ பிருஷ்ட விமான அமைப்பு"டன் கட்டப்பட்ட கோவில் இது. இங்கு உள்ள அகத்தீஸ்வரர், "சுயம்பு லிங்கம்" ஆவார்.
                
                ஒருவரது ஜாதகத்தில் சந்திரனை சனி நெருங்கும் போது ஏழரைச்சனி அவருக்கு தொடங்குகிறது. ஏழரைச் சனி ஒருவரது வாழ்வினில் முதல் முறை வரும் போது அவருக்கு சனியின் முதல் சுற்று தொடங்குகிறது. எல்லோருடைய வாழ்விலும் மூன்று முறை சனி பகவான் வலம் வருவார். ஒரு சிலருக்கு நான்கு முறை கூட வலம் வர வாய்ப்பு உண்டு. முதல் சுற்றை "மங்கு சனி" என்றும், இரண்டாவது சுற்றை "பொங்கு சனி" என்றும், மூன்றாவது சுற்றை "இறுதி சுற்று" என்றும் கூறுவர். இதில் "பொங்கு சனி" காலத்தில் சனி நல்லது செய்வார் என்பது பொது விதி.

27.12.20-ல் நடைபெறும் இந்த சனிப் பெயர்ச்சியின் விளைவாக நற்பலன்கள் பெரும் ராசிகள் : மேஷம், ரிஷபம், கன்னி, விருச்சிகம்மேஷ ராசிக்கு தொழில் சனி வருகிறது. அதனால், இந்த சனிப் பெயர்ச்சி காலகட்டத்தில் மேஷ ராசிக்காரர்கள்  தொழிலில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சி அடைவர். சனிப் பெயர்ச்சியின் விளைவாக; ரிஷப ராசிக்கு அஷ்டமத்து சனி விலகுகிறது, கன்னி ராசிக்கு அர்த்தாஷ்டம சனி விலகுகிறது, விருச்சிக ராசிக்கு ஏழரை சனி விலகுகிறது. எனவே, இந்த மூன்று ராசிக்காரர்களுக்கும் இந்த சனிப் பெயர்ச்சி சிறப்பான பலனை கொடுக்கும்.
 
பரிகாரங்கள் செய்வதன் மூலம் சனிப் பெயர்ச்சியின் பலன் பெரும் ராசிகள் : மிதுனம், துலாம், தனுசு, மகரம், கும்பம்சனிப் பெயர்ச்சியின் விளைவாக; மிதுன ராசிக்கு அஷ்டமத்து சனி வருகிறது, துலாம் ராசிக்கு அர்த்தாஷ்டம சனி வருகிறது, தனுசு ராசிக்கு பாத சனி வருகிறது, மகர ராசிக்கு ஜென்ம சனி வருகிறது. ஆகையால், இந்த நான்கு ராசிக்காரர்களும் பரிகாரம் செய்து கொள்வது நல்லது.

அமைவிடம் :

அருள்மிகு ஸ்ரீ ஆனந்தவல்லி தாயார் சமேத அகத்தீஸ்வரர் சுவாமி திருக்கோவில், 

பொழிச்சலூர்,

சென்னை - 600 074.

(பல்லாவரத்தில் இருந்து குன்றத்தூர் செல்லும் வழியில் பம்மலுக்கு அடுத்து உள்ளது பொழிச்சலூர்.)  

Comments

Popular posts from this blog

ஆவணி மூன்றாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : அருள்மிகு ஸ்ரீ ஆதி காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் சுவாமி திருக்கோவில், கெருகம்பாக்கம். : பகுதி1

ஆவணி இரண்டாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : ஸ்ரீபீடம் ஸ்ரீ பாலா சமஸ்தானம் திருக்கோயில், செம்பாக்கம் : பகுதி :4.

ஸ்ரீ வியாச சாந்தாலீஸ்வரர் திருக்கோவில், காஞ்சிபுரம் : சித்தர்க்கடியான்.