"எந்தெந்த ராசிகளுக்கு நற்பலன்கள் கிடைக்கும்? எந்தெந்த ராசிகளுக்கு பரிகாரங்கள் பண்ண வேண்டும்? எந்தெந்த ராசிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?" : சித்தர்க்கடியான்.

 "எந்தெந்த ராசிகளுக்கு நற்பலன்கள் கிடைக்கும்? எந்தெந்த ராசிகளுக்கு பரிகாரங்கள் பண்ண வேண்டும்? எந்தெந்த ராசிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?" : சித்தர்க்கடியான்.

                                                                                       பகுதி -2

"ஓம் ஏகதந்தாய வித்மஹே 
வக்ரதுண்டாய தீமஹீ 
தந்நோ தந்தி ப்ரசோதயாத்."
 
"வாக்கியப் பஞ்சாங்க"ப்படி நிகழும் சார்வாரி வருடம் மார்கழி மாதம் 12-ஆம் தேதி (27.12.2020) ஞாயிற்றுக் கிழமை அன்று அதிகாலை 04.49 AM மணி அளவில் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்கிறார்.

சூர்யன் மற்றும் விஸ்வகர்மாவின் மகளான சஞ்சனா எனப்படும் சரண்யாவிற்கு பிறந்தவர் எமதர்ம ராஜா ஆவார். சஞ்சனா சிவபெருமான் மீது தீவிர பக்தி கொண்ட காரணத்தால், அவரை நோக்கி கடும் தவம் செய்ய விரும்பினார். அதனால், தனது நிழலான சாயா என்னும் பெண்ணை உருவாக்கி தனக்கு பதிலாக சூரியனுடன் இருக்க செய்து விட்டு தவம் செய்ய சென்று விட்டார். அப்படி சஞ்சனா விட்டு சென்ற அவளது நிழலான சாயாவிற்கும், சூரியனுக்கும் பிறந்த புதல்வன் தான் "சனீஸ்வரர்". அவரது வரலாற்றை முழுமையாக நாளை பார்ப்போம்.

ஒருவரது ஜாதகத்தில் சந்திரனை சனி நெருங்கும் போது ஏழரைச்சனி அவருக்கு தொடங்குகிறது. ஏழரைச் சனி ஒருவரது வாழ்வினில் முதல் முறை வரும் போது அவருக்கு சனியின் முதல் சுற்று தொடங்குகிறது. எல்லோருடைய வாழ்விலும் மூன்று முறை சனி பகவான் வலம் வருவார். ஒரு சிலருக்கு நான்கு முறை கூட வலம் வர வாய்ப்பு உண்டு. முதல் சுற்றை "மங்கு சனி" என்றும், இரண்டாவது சுற்றை "பொங்கு சனி" என்றும், மூன்றாவது சுற்றை "இறுதி சுற்று" என்றும் கூறுவர். இதில் "பொங்கு சனி" காலத்தில் சனி நல்லது செய்வார் என்பது பொது விதி.
27.12.20-ல் நடைபெறும் இந்த சனிப் பெயர்ச்சியின் விளைவாக நற்பலன்கள் பெரும் ராசிகள் : மேஷம், ரிஷபம், கன்னி, விருச்சிகம்மேஷ ராசிக்கு தொழில் சனி வருகிறது. அதனால், இந்த சனிப் பெயர்ச்சி காலகட்டத்தில் மேஷ ராசிக்காரர்கள்  தொழிலில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சி அடைவர். சனிப் பெயர்ச்சியின் விளைவாக; ரிஷப ராசிக்கு அஷ்டமத்து சனி விலகுகிறது, கன்னி ராசிக்கு அர்த்தாஷ்டம சனி விலகுகிறது, விருச்சிக ராசிக்கு ஏழரை சனி விலகுகிறது. எனவே, இந்த மூன்று ராசிக்காரர்களுக்கும் இந்த சனிப் பெயர்ச்சி சிறப்பான பலனை கொடுக்கும்.
 
பரிகாரங்கள் செய்வதன் மூலம் சனிப் பெயர்ச்சியின் பலன் பெரும் ராசிகள் : மிதுனம், துலாம், தனுசு, மகரம், கும்பம்சனிப் பெயர்ச்சியின் விளைவாக; மிதுன ராசிக்கு அஷ்டமத்து சனி வருகிறது, துலாம் ராசிக்கு அர்த்தாஷ்டம சனி வருகிறது, தனுசு ராசிக்கு பாத சனி வருகிறது, மகர ராசிக்கு ஜென்ம சனி வருகிறது. ஆகையால், இந்த நான்கு ராசிக்காரர்களும் பரிகாரம் செய்து கொள்வது நல்லது.
 
1. மேஷம் : கர்ம சனி.

2. ரிஷபம் : பாக்கிய சனி.

3. மிதுனம் : அஷ்டம சனி.

4. கடகம் : கண்டக சனி.

5. சிம்மம் : ரண, ருண சனி.

6. கன்னி : பஞ்சம சனி.

7. துலாம் : அர்த்தாஷ்டம சனி.

8. விருச்சிகம் : தைரிய, வீர்ய சனி.

9. தனுசு : பாத சனி.

10. மகரம் : ஜென்ம சனி.

11. கும்பம் : விரய சனி.

12. மீனம் : லாப சனி.

விநாயகர், அனுமன் மற்றும் பைரவரை வணங்கி வர எல்லா வித சனி தோஷங்களில் இருந்தும் நிவர்த்தி பெறலாம். அதை நாளை பார்ப்போம். 

ஹரி ஓம்! ஸ்ரீ குருப்யோ நம !!

நாளையும் தொடரும் பலன்கள் மற்றும் பரிகாரங்களுடன்.........    

 

Comments

Popular posts from this blog

ஆவணி மூன்றாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : அருள்மிகு ஸ்ரீ ஆதி காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் சுவாமி திருக்கோவில், கெருகம்பாக்கம். : பகுதி1

ஆவணி இரண்டாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : ஸ்ரீபீடம் ஸ்ரீ பாலா சமஸ்தானம் திருக்கோயில், செம்பாக்கம் : பகுதி :4.

ஸ்ரீ வியாச சாந்தாலீஸ்வரர் திருக்கோவில், காஞ்சிபுரம் : சித்தர்க்கடியான்.