வேதாத்திரி மகரிஷி அவர் களால் உருவாக்கப்பட்ட வாழ்க வளமுடன் இறை இயக்கத்தின் நித்யானந்த தவம் உருவான வரலாறு : சித்தர்க்கடியான்.

வேதாத்திரி மகரிஷி அவர் களால் உருவாக்கப்பட்ட வாழ்க வளமுடன் இறை இயக்கத்தின் "நித்யானந்த தவம்" உருவான வரலாறு:சித்தர்க்கடியான்.

 அன்பர்கள் அழைப்பின் பெயரில் ஒருமுறை வேதாத்திரி மகரிஷிஅவர்கள் பூடான் சென்று இருந்தார்கள். அங்கு ஒரு புத்தர் கோவிலுக்கு மகரிஷியை அன்பர்கள் அழைத்துச் சென்று இருந்தார்கள். அந்த கோவிலின் வாயிலில்

"ஓம் மணி பத்மீ ஹம்" என்ற வாசகம் எழுதபட்டிருந்தது. அந்த மந்திர வாசகத்தின் பொருள் பற்றி அங்கிருந்தவர்களிடம் மகரிஷிஅவர்கள் விசாரித்து தெரிந்து கொள்கிறார். "ஓம் மணி பத்மீ ஹம்" என்று சொல்லி கொண்டே மூலாதாரதிலிருந்து உச்சிக்கு செல்ல வேண்டும். "ஹம்" என்று சொல்லிக்கொண்டே மூலாதாரத்திற்கு வரவேண்டும். இப்பயிற்சி செய்ய செய்ய உடலுக்கு குளிரைத் தாங்கும் சக்தி உண்டாகும்.

 கடும் குளிரில் இருக்கின்ற அம்மக்கள் இந்த மூச்சுப் பயிற்சி மட்டுமே செய்து செய்தே உடல் சூட்டை பாதுகாத்துக் கொள்கிறார்கள் என்பதை மகரிஷிஅவர்கள் அறிந்தார். இத்தவதிற்கு "திபெத்திய தவம்" என்று பெயரிட்டு சிறப்பு பயிற்சிகளில் முன்பு மன்ற அன்பர்களுக்கு மகரிஷி அவர்கள் கற்றுக் கொடுத்துள்ளார்கள்.

                    எதிலும் ஆராய்ச்சி மிக்கவரான அருட்தந்தை அவர்கள் தமிழகத்திலுள்ள தட்பவெட்ப நிலைக்கு ஏற்ப எக்காலத்திற்கும் உகந்ததாக எளிமைபடுத்தி இதை வடிவமைத்தார்கள். மூச்சோடு மனதை மூலாதாரதிலிருந்து உச்சிவரை கொண்டு சென்று பிறகு அங்கிருந்து மூச்சை விட்டுக்கொண்டே உடல் முழுவதும் பரவச் செய்யும் முறையை கொண்டுவந்தார்கள். பின் விரிந்து விரிந்து எல்லையற்ற பிரபஞ்சத்தோடு சங்கமம்.                     இது நிலைத்த ஆனந்தம் கொடுக்க கூடியது ஆகையால் இதற்கு "நித்யானந்த தவம்" என பெயரிட்டார்கள்.

                    "வாழ்க வளமுடன். வாழ்க வையகம்."


Comments

Popular posts from this blog

ஆவணி மூன்றாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : அருள்மிகு ஸ்ரீ ஆதி காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் சுவாமி திருக்கோவில், கெருகம்பாக்கம். : பகுதி1

ஆவணி இரண்டாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : ஸ்ரீபீடம் ஸ்ரீ பாலா சமஸ்தானம் திருக்கோயில், செம்பாக்கம் : பகுதி :4.

ஸ்ரீ வியாச சாந்தாலீஸ்வரர் திருக்கோவில், காஞ்சிபுரம் : சித்தர்க்கடியான்.