ஆக்னை எனப்படும் நம் நெற்றியின் மையப் பகுதி மற்றும் சூர்ய, சந்திர கலைகள் பற்றி தெரிந்து கொள்வோம் : சித்தர்க்கடியான்.

 ஆக்னை எனப்படும் நம் நெற்றியின் மையப் பகுதி மற்றும் சூர்ய, சந்திர கலைகள் பற்றி தெரிந்து கொள்வோம் : சித்தர்க்கடியான்.

                உண்மையில் கண்கள் ஏகாக்கிரக சக்தியை வாங்கக் கூடியவைதான். ஞான ஒளியைக் காணவும், இறைவனை அடையவும் கண்களே மூல காரணம். அதாவது; விறகுகளை அடுக்கி, அதில் சிறு நெருப்பை வைத்தால், அது கொழுந்துவிட்டு எரியும். அதுபோலவே, வீட்டிற்க்குள் நடுவீடு என்று ஒன்று உண்டு.

                அங்கு விளக்கு ஏற்றி வணங்கி, தெய்வத்தை வழிபடுவார்கள். அதுபோலவே நம் உடலுக்கு நடுவீடு, நெற்றி நடுவான புருவ மத்தியம். அங்கு ஒளியேற்றி இறைவனை அடையவேண்டும். நம் புருவ நடுவில் அக்கினி, சூரியன், சந்திரன் என்னும் மூன்று ஒளிநாடிகள் இருக்கின்றன. அதில், அக்கினி நாடி உடலுக்கு எப்பொழுதும் உஷ்ணத்தைக் கொடுத்த வண்ணம் இருக்கும். அதனால்தான் ஜுரமோ, தலைவலியோ வந்தால் நெற்றியில் மருந்து போட்டால் உஷ்ணம் தணியும்.

                மற்ற இரண்டு ஒளி நாடிகளில், ஒன்று சூரிய நாடி; இது வலது கண்ணின் நாடி, மற்றொன்று சந்திர நாடி; இது இடது இடது கண்ணின் நாடி. இந்த இரண்டு நாடி ஒளிகளும் கண்களிலிருந்து வெளி உலகத்தைப் பார்த்த வண்ணம் இருக்கும்.

கண்ணாடி பார்ப்பது எது?

        நம் கண்களின் நாடிகள் இரண்டும் புருவ நடுவில் கூடும் இடத்தைக் கண்ணாடி என்றும், இந்த கண்ணாடியான புருவ நடு இடத்தை, எண்ணத்தின் நினைவால், உற்றுகூர்ந்து பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு, சகல விசயங்களும் புரியும் என்று கூறுவர்.

சூரிய சந்திர கலைகள்:

        நாம் இழுத்து விடும் சுவாசங்கள் அத்தனையும், நம் புருவ நடுவில் உட்புறம் மோதித்தான் போகும், மோதித்தான் வரும். நாசியில் வலதுபுறம் போகும் சுவாசம், வலது கண்ணின் நாடியான சூரிய நாடியை உரசிக் கொண்டு போகும், வரும். சுவாசமும் உரசிக் கொண்டு வரும். இதைச் சூரிய கலை என்பர்.

        இதேபோல் நாசியில் இடதுபுறம் போகும் சுவாசம், இடது கண்ணின் நாடியான சந்திர நாடியை உரசிக் கொண்டு போகும். உரசிக் கொண்டு வரும். இதைச் சந்திர கலை என்பர்.

             சில சமயம் இரண்டு சுவாசங்களும் ஒன்றாகச் சேர்ந்து, அக்கினி நாடியை உரசிக் கொண்டு போகும், உரசிக் கொண்டு வரும். இதைச் சூன்ய நிலை என்று கூறுவார்கள். ஞான நிலையில் சூரிய சந்திர கலைகள் வேறு.
தொடர்ந்து பேசுவோம் "சித்தர்க்கடியான் எழுதும் ஆன்மீக பக்கங்கள்" வாயிலாக "TEMPLES OF TAMILAGAM" மூலம்.

Comments

Popular posts from this blog

ஆவணி மூன்றாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : அருள்மிகு ஸ்ரீ ஆதி காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் சுவாமி திருக்கோவில், கெருகம்பாக்கம். : பகுதி1

ஆவணி இரண்டாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : ஸ்ரீபீடம் ஸ்ரீ பாலா சமஸ்தானம் திருக்கோயில், செம்பாக்கம் : பகுதி :4.

ஸ்ரீ வியாச சாந்தாலீஸ்வரர் திருக்கோவில், காஞ்சிபுரம் : சித்தர்க்கடியான்.